சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, August 29, 2013

அக்குறணையில் அரசியல் போட்டி: விட்டுக்கொடுக்க வேண்டியது முஸ்லிம் காங்கிரஸா? மக்கள் இயக்கமா?

By on 10:54 PM


மத்­திய மாகா­ண­சபைத் தேர்­த­லுக்­கான கட்­சி­களின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அக்­கு­ற­ணையில் பல சவால்­களை எதிர் கொண்­டுள்­ளது.

மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு வபாத்­தான அக்­கு­றணை பிர­தேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் மர்ஹூம் கங்கா முஹ்­சீனின் வெற்­றிடம் இது வரை நிரப்­பப்­ப­டாமை அக்­கு­றணை மக்­க­ளி­டையே சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த அக்­கு­றணை பிர­தேச சபைத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனித்துப் போட்­டி­யிட முன்­வந்த போது நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பும் (பீ.எம்.ஜே.டி) கள­மி­றங்­கி­யமை அக்­கட்­சிக்கு பெரும் சவா­லாக அமைந்­தது. இந்­நி­லையில் முஸ்லிம் காங்­கிரஸ் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்­பினை அழைத்து பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­யொன்­றிலும் கையொப்­ப­மிட்­டது.

இரு தரப்­பி­னரும் கைச்­சாத்­திட்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பு முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் சேர்ந்து மரச் சின்­னத்தின் கீழ் போட்­டி­யிட்­டது. தேர்­தலில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு 3 ஆச­னங்கள் கிடைத்­தன. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைச் சேர்ந்த கங்கா முஹ்சீன் முத­லா­வ­தாகத் தெரி­வானார். ஏனைய இரு­வரும் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்­பி­லி­ருந்து தெரி­வா­னார்கள். தேர்­தலில் நான்காம் இடத்­தையும் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்­பி­னரே கைப்­பற்­றினர். தேர்தல் முடி­வு­களின் படி குறிப்­பிட்ட அமைப்பைச் சேர்ந்த இர்பான் காதர் நான்காம் இடத்­தினைப் பெற்றார்.

அக்­கு­றணை பிர­தேச சபையின் உறுப்­பினர் கங்கா முஹ்­சீனின் மறை­வுக்கு முன்பு அக்­கு­றணை பிர­தேச சபையில் கங்கா முஹ்­சீ­னையும் உள்­ள­டக்கி மொத்தம் 7 முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் 7 பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களும் பிர­தி­நி­தித்­துவம் பெற்­றி­ருந்­தனர். ஆனால் கங்கா முஹ்­சீனின் மறை­வுக்குப் பின்பு முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் உறுப்­பினர் ஒரு­வரின் பெயர் சிபா­ரிசு செய்­யப்­பட்டு வெற்­றிடம் நிரப்­பப்­ப­டா­மை­யினால் தற்­போது 6 முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் 7 பெரும்­பான்மை சமூக உறுப்­பி­னர்­களும் அக்­கு­றணை பிர­தேச சபையில் அங்­கத்­துவம் வகிக்­கின்­றனர்.

எனவே இன்­றைய சூழ்­நி­லையில் அக்­கு­றணை பிர­தேச சபையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக ஏதா­வது தீர்­மா­னங்கள் முன்­மொ­ழி­யப்­பட்டால் அதனை பிர­தேச சபைத் தலை­வரால் எதிர்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­ப­டலாம்.இதனை முஸ்லிம் காங்­கிரஸ் தலைமைப் பீடம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கங்கா முஹ்­சீனின் மறை­வை­ய­டுத்து வெற்­றி­ட­மா­க­வுள்ள அங்­கத்­துவம் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்­புக்கே வழங்­கப்­ப­ட­வேண்டும். விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டை­யிலும் எற்­க­னவே முஸ்லிம் காங்­கி­ரஸும் குறிப்­பிட்ட அமைப்பும் அக்­கு­ற­ணையைச் சேர்ந்த முன்­னணி உல­மாக்கள் முன்­னி­லையில் செய்து கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டை­யிலும் இந்­நி­ய­ம­னத்தை நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்­புக்கு வழங்க வேண்­டிய நிர்ப்­பந்தம் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைத்­து­வத்­துக்கு ஏற்­பட்­டுள்­ளது.

குறித்த விவ­காரம் தொடர்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்­மையில் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான அமைப்­புடன் கண்­டியில் பேச்­சு­வார்த்­தை­யொன்­றினை நடத்­தினார். பேச்­சு­வார்த்­தையின் போது அக்­கு­றணை பிர­தேச சபையில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு தற்­போது ஒரு பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­மை­யினால் குறித்த பிர­தி­நி­தித்­து­வத்தை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு விட்டுத் தரு­மாறு அமைச்சர் ஹக்கீம் வேண்­டுகோள் விடுத்தார். இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் கார­சா­ர­மான விவா­தங்­களும் இடம்­பெற்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால் குறித்த பிர­தி­நி­தித்­துவம் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தின் படி தமக்கே வழங்­கப்­பட வேண்­டு­மென நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பு உறு­தி­யாக இருந்­தது. இதே­வேளை அமைப்­பினால் மாற்றுக் கருத்­தொன்றும் அமைச்­ச­ரிடம் முன்­வைக்­கப்­பட்­டது.

அக்­கு­றணை மகளிர் வித்­தி­யா­ல­யத்தில் நிலவும் இடப்­பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்­வ­தற்­காக அமைச்சர் ஹக்கீம் புதிய கட்­டி­ட­மொன்­றினைப் பெற்றுத் தந்தால் அக்­கு­றணை பிர­தேச சபையில் நிலவும் வெற்­றி­டத்தை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு விட்டுக் கொடுப்­ப­தாக நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான அமைப்பு ரவூப் ஹக்­கீ­முக்கு ஆலோ­சனை தெரி­வித்­தது. சில மாதங்­க­ளுக்கு முன்பு அமைச்சர் ஹக்கீம் அக்­கு­றணை மகளிர் வித்­தி­யா­ல­யத்­திற்கு நேரில் விஜயம் செய்து இடப்­பற்­றாக்­கு­றையை கண்­ட­றிந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே வேளை இரு தரப்பும் உல­மாக்­களின் முன்­னி­லையில் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையின் படி அக்­கு­ற­ணைக்கு சுமார் 80 கோடி ரூபாய் மதிப்­பி­லான வேலைத் திட்­டங்­களை வழங்­கு­வ­தா­கவும் இணக்கம் காணப்­பட்­டது. எனினும் இந்த உடன்­ப­டிக்கை இது­வரை அமுல் செய்­யப்­பட வில்லை என நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பின் பிர­தி­நி­தி­யொ­ருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

தற்­போது மத்­திய மாகாண சபைத் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பின் ஆத­ர­வினை பெற்­றுக்­கொள்ள தேர்­தலில் போட்­டி­யிடும் பல அர­சியல் கட்­சிகள் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றன.

அக்­கு­றணை பிர­தேச சபையில் வெற்­றி­ட­மாக உள்ள பிர­தி­நி­தித்­து­வத்தை முஸ்லிம் காங்­கிரஸ் யாருக்கு வழங்­கப்­போ­கி­றது? என்று அக்­கு­றணை மக்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றார்கள். அக்­கட்சி தான் செய்து கொண்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­யையும் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பையும் புறக்­க­ணித்தால் முஸ்லிம் காங்­கி­ரஸின் வாக்­கு­வங்­கியில் நிச்­சயம் சரி­வுகள் ஏற்­படும்.

இதே­வேளை அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி மசூத் அண்­மையில் ஊட­க­மொன்­றுக்கு தெரி­வித்­தி­ருந்த கருத்­தினை நோக்­கு­கையில் குறிப்­பிட்ட அமைப்பு தொடர்ந்தும் முஸ்லிம் காங்­கி­ரஸ் நம்­பிக்கை கொண்­டுள்­ளது என்றே எண்ணத் தோன்­று­கி­றது. அவர் வெற்­றி­ட­மா­க­வுள்ள அங்­கத்­தவர் நிய­மன விட­யத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் அநீ­தி­யாக நடந்து கொள்­ளாது என கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் மத்­திய மாகா­ண­சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முதன்மை வேட்­பாளர் ஏ.எல்.எம். உவைஸ் கருத்து தெரி­விக்­கையில்;-

கட்­சியின் தலை­மைப்­பீடம் மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தகு­தி­யான வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வ­திலும் வேட்பு மனுத்­தாக்­க­லிலும் மும்­மு­ர­மாக ஈடு­பட்­ட­தினால் அக்­கு­றணை பிர­தேச சபையின் பிரச்­சி­னையை தீர்வு காணு­வதில் தாம­த­மேற்­பட்­டி­ருக்­கலாம். அக்­கு­றணை பிர­தேச சபை வெற்­றி­டத்­துக்கு விரைவில் சுமு­க­மான தீர்வு காணப்­படும் என்றார்.

இது சம்­பந்­த­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான எம்.நயீ­முல்லாஹ் கருத்து தெரி­விக்­கையில்;-

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வ­தற்­காக புதிய சட்ட மூல­மொன்று கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அதில் சில திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இதன் கார­ண­மா­கவே அக்­கு­றணை பிர­தேச சபையில் வெற்­றி­ட­மா­க­வுள்ள பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு ஒரு­வரை நிய­மிப்­பதில் கால தாம­த­மேற்­பட்­டுள்­ளது.

நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் இயக்­கத்­துடன் முஸ்லிம் காங்­கிரஸ் செய்து கொண்­டுள்ள புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் அக்­கு­றணை பிர­தேச சபையில் தவி­சாளர் பத­விக்கு வெற்­றிடம் ஏற்­பட்டு பட்­டி­யலில் அடுத்­த­தாக இருக்கும் வேட்­பாளர் நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்­பி­ன­ராக இருந்தால் தவி­சாளர் பத­விக்கு புதிய ஒரு­வரை நிய­மிக்கும் அதி­காரம் இந்த அமைப்­புக்­கு­ரி­ய­தாகும் என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. உறுப்­பினர் பத­வியில் வெற்­றிடம் ஏற்­பட்டால் உறுப்பினர் ஒருவரை எனக் குறிப்­பி­டப்­பட்­டில்லை.

நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பு கடந்த அக்­கு­றணை பிர­தேச சபைத் தேர்­தலில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து மரச்­சின்­னத்தில் போட்­டி­யிட்­ட­த­னா­லேயே அவர்­களால் இரண்டு உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொள்ள முடிந்­தது என்­பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பிர­தேச சபை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட காலம் தொட்டு அக்­கு­றணை பிர­தேச சபையில் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நி­தித்­துவம் இருந்து வந்­துள்­ளது. எனவே தற்­போது ஏற்­பட்­டுள்ள வெற்­றிடம் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கே உரி­யது என்­பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அக்­கு­றணை மகளிர் வித்­தி­யா­ல­யத்தில் இடப்­பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்தால் தாம் உறுப்பினர் பதவியை விட்டுத் தருவதாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு பேரம் பேசுவது நடைமுறைக்குச் சாத்தியமில்லை. ஏனென்றால் ஒரு பாடசாலை அபிவிருத்தியை குறுகிய காலத்தில் ஓரிரு மாதங்களில் மேற்கொள்ள முடியாது. அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனையோ நடைமுறைகளை செயற்படுத்த வேண்டியுள்ளது.

தேர்தல் ஆணையாளர் வெற்றிடமாகவுள்ள பிரதேச சபை உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு பெயரைக் குறிப்பிடும் படி கட்சியின் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறவிப்பார். அறிவித்தல் கிடைத்ததும் கட்சி ஒருவரை நியமிக்கும். அவ்வாறு கட்சி ஒருவரின் பெயரை குறிப்பிடாவிட்டால் பட்டியலில் அடுத்து இருப்பவர் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்படுவார் என்றார்.

அக்குறணை பிரதேச சபைக்கு உறுப்பினர் நியமன விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இவ்விவகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
(A.R.A.Fareel)

0 comments:

Post a Comment