சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, September 23, 2013

தெல்தோட்டையை ஒருபோதும் மறந்துவிடமாட்டேன் - லாபிர் ஹாஜியார்

By on 2:39 AM

தெல்தோட்டையை எனது கோட்டையாகவே நினைத்திருந்தேன். இருந்தாலும் இம்முறை நான் எதிர்ப்பார்த்த அளவுக்கு தெல்தோட்டை மக்களின் ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை. அதற்காக நான் ஒருபோதும் தெல்தோட்டையை மறந்துவிடப்போவதில்லை. எனது சேவை தெல்தோட்டையில் தொடரும் என மத்திய மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) தெல்தோட்டை வெய்ஸ்க்கு தெரிவித்தார்.

மீண்டும் மத்திய மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெல்தோட்டையிலிருந்து குறிப்பிட்டளவு மக்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்களின் வாக்குகளுக்காகத்தான் நான் சேவை செய்ய வேண்டியதில்லை. நான் சகல மக்களினதும் நலன்களில் அக்கறைகொண்டுள்ளவன் என்ற வகையில் தெல்லோட்டை பகுதியில் எனது சேவையை தொடர்ந்து முன்னெடுப்பேன்.

தெல்தோட்டை மக்கள் பல சேவைகளையும் அபிவிருத்திகளையும் எதிர்ப்பார்க்கின்றனர். நான் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே எனது சேவைகளை முன்னெடுப்பேன்.

கடந்த தேர்தலின்போது எனக்கு 20 ஆயிரம் பேர் வரையிலானோர் ஆதரவளித்தனர். ஆனால் இம்முறை 45 ஆயிரத்திரத்திற்கும் மேற்பட்டோர் எனக்கு அங்கீகாரம் அளித்துள்ளமை என்னை மேலும் உட்சாகமூட்டுகின்றது.

சமூக சேவைகளின் போது ஒருபோது நான் இன, மத, மொழி, வர்க்க வேறுபாடுகளை காட்டுவதில்லை. இனிமேலும் அவ்வாறே நடந்துகொள்வேன்டு. அத்தோடு மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. அதனை சரிவர செய்யவேண்டியது. எனது பொறுப்பு. என்னை வெற்றிபெற செய்த இறைவன் இதற்கும் சக்தியை தருவான என்ற நம்பிக்கை எனக்கு கிடைக்கும் என்றார்.

0 comments:

Post a Comment