சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, September 2, 2013

எகிப்து, சிரியா பிரட்சினையில் தெளிவு பெறுவது ஐிஹாத் - ரவூப் ஸெய்ன்

By on 8:48 AM
 ( JaseemDeltota)

எகிப்து, சிரியா நாடுகளில் விஸ்வரூபமெடுத்திருக்கும் பிரட்சினைகள் தொடர்பாக தெளிவான அறிவைப் பெறுவது ஐிஹாத் ஆகும் என அஷ்ஷேய்க் ரவூப் ஸெய்ன் (நளீமி) தெரிவித்தார்.

நேற்று (01.09.2013) தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற 'எகிப்து, சிரியா பிரட்சினைகளும் அதன் பின்புலன்களும்' என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆண்கள், பெண்கள் என அதிகமானோர் இதில் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

சவுதி அரேபியா தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் அடாவடித்தனங்களையும், அட்டூழியங்களையும் தோலுரித்து விளக்கினார். எகிப்தில் பொது மக்கள் படுகொலைக்கு பிண்ணணியில் இருப்பது சவுதி அரேபியா என்ற உண்மையை ஆதாரங்களோடு முன்வைத்தார். இரண்டு மணி நேர உரையின் இருதியில் அனைவரது கண்களும் கண்ணீரால் நிரம்பிவிட்டது. யா அல்லாஹ் எமது எமது இஸ்லாமிய சொந்தங்களை பாதுகாப்பாயாக....!

சிரியாவில் இருப்பவர்கள் யார? எகிப்தில் இருப்பவர்கள் யார்? உண்மையான கிளர்ச்சியாளர்கள் யார்? ஈரான் யார்? சவுதி அரேபியா யார்? இஸ்ரேல் யார்? அமேரிக்கா யார்? பிரித்தானியா? யார் இஸ்லாத்திற்கு ஆதரவானவர்கள்? யார் எதிரிகள்? அல்லாஹ்வின் நண்பர்கள் யார்? அல்லாஹ்வின் எதிரி யார்? இந்த கேள்விகளுக்கான விடைகளை புரிந்துக் கொள்வது ஆகப் பெரிய ஐிஹாத ஆகும்.

சிரியா, எகிப்து விவகாரத்தில் எம்மை அதிகம் பிணைத்துக் கொள்தினூடாக ஈமானை அதிகரித்துக் கொள்ள முடியும்.


அத்தோடு அதிகமதிகம் எமது துஆக்களையும் இறைவனிடம் பிரார்த்திப்பது எமது தலையாய கடமையாகும்.


0 comments:

Post a Comment