(ஊருபலாய் உஸ்தா)
கண்டி மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஊடகதுறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மடிக்கணினிகளை வழங்கிய செய்தி அறிந்ததும் எனக்குள் ஒர சந்தேகம் வந்தது. இப்போது தேர்தல் காலம் வேறு மத்திய மாகாண சபையின் 30 ஆசனங்கள் கண்டி மாவட்டத்துக்குறியது. இந்த சந்தர்ப்த்தில் திடீர் என அமைச்சர் இப்படியெல்லாம் எதற்கு ஊடகவியலாளர்களை கவனிக்க வேண்டும்.
கண்டி மாவட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய ஒர கோட்டையாக இருந்தது. ஏற்கனவே கெஹலிய, எஸ்.பி, காதர் என எல்லோரும் அரசின் பக்கம் சாய்ந்ததன் பின்னர் இப்போத ஐ.தே.கா ஒரளவு வாக்குப்பலத்துடன் தான் இருக்கிறது.
இந்த நிலையில் ஊடகவியலாளர்களை மடக்கிப்போட்டால் கண்டியில் உள்ள அரசின் தில்லு முள்ளுகள் எல்லாம் மூடி மறைத்துவிடுவர். அரசு பல அபிவிருத்தி திட்டங்களை செய்வதாக பல செய்திகளை இட்டுக்கட்டுவர் என நினைத்துவிட்டார்கள் போலும்.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...
இன்னொரு விஷயம்
கண்டி மாவட்ட ஊடகவியலாளா்களுக்கு மடிக்கணனி வழங்கும் விடயத்தில் ஏற்பட்ட குறைபாட்டிற்கான தனது வருத்தத்தை தெரிவித்த ஊடாக அமைச்சா்.
எதிர்வரும் காலங்களில் கண்டி மாவட்ட ஊடகவியலாளா்களுக்கு் 20 மடிக்கணனிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.
பிரதேச ஊடகவியலாளா்களுக்கு பல்வேறு நலன் புரி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறதாம்.
மட்டுமல்ல ஊழியா் சேமலாபநிதி, ஊடகவியலாளா் காப்புறுதி ஊடகவியலாளா் உயா் கல்வி நன்னொடை என்பன தொடாபாக உரிய நடவடிக்கை எடுக்பபடும். இருப்பினும் மடிக்கணனி விடயத்தில் நடந்த சம்பவத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் அதனை கட்டம் கட்டமாகப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக கதை அளந்திருக்கிறார் அமைச்சர்.
என்வென்றாலும் இலவசமா கிடைச்சா நம்ம சமூகம் பின்னாலே போவாங்க அது உண்மை தான். ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூனாக இருக்கிறது.
இதனை இந்த ஜனநாயக நாடு மட்டுமல்ல ஊடகவியலாளர்களும் மறந்து விட்டனர். தற்போது ஊடகங்களில் கண்டி மாவட்ட தேர்தல் தொடர்பான செய்திகளை பார்க்கும் போது அவை அரசின் செய்தியாக மட்டும் தான் இருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் பிரதேதசத்து முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தான் இப்படி செய்கின்றார்கள் என்று கூறுவதில் தப்பில்லை.
கண்டி தேர்தல் களத்தின் செ்யதிகளை பார்க்கும் போது அவை அரசின் செ்யதியாக இருக்கும் இல்லையேல் அரசின் பங்காளிகளான முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொலிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னனியின் செய்திகளாக தான் இருக்கும்.
இப்படி போனால் நாட்டில் பலமான எதிர்கட்சி உருவாகாது. சர்வாதிகாரத்தை நோக்கி அரசு செல்லும். ஊடகவியலாளர்கள் சலுகைகளுக்கு விலை போகாமல் சமூகத்தை பற்றயும் கட்டாயம் சிந்திக்க வேண்டும்.

0 comments:
Post a Comment