சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, April 8, 2014

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

By on 7:10 PM

இலங்கை மத்திய வங்கியின் 2013 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை நேற்று (08) வெளியிடப்பட்டது.

நிதிச் சட்டத்தின் 35 ஆவது சரத்தின் பிரகாரம், நாட்டின் பொருளாதாரம் தொடர்பான நிலைமைகளைஇ மத்திய வங்கியின் செயற்பாடுகள் மற்றும் குறித்த வருடத்தில் நிதிச் சபையின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்வரும் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்குள் நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதற்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் 64 ஆவது வருடாந்த அறிக்கையை நிதி அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று மத்திய வங்கி ஆளுநர் கையளித்தார்.

இந்த அறிக்கையின் பிரகாரம் 2013 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் நூற்றுக்கு 7.3 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

இதன்போது பொருளாதாரத்தின் முக்கிய கூறுகளான விவசாயத்துறை 4.7 வீதத்தினாலும், கைத்தொழிற்துறை 9.9 வீதத்தாலும், அதேபோன்று சேவைகள் துறை 6.4 வீதத்தினாலும் வளர்ச்சி கண்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி தொடர்பில் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் , பணவீக்கம் மற்றும் வட்டி வீதாசாரத்தை குறைந்த புள்ளியில் வைத்துக்கொண்டமை உட்பட பொருளாதாரத்தின் நிலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment