சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, April 8, 2014

கிண்ணத்துடன் நாடு வந்த இலங்கை அணிக்கு பெரு வரவேற்பு!

By on 7:04 PM

இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணி இலங்கை வந்தடைந்தது.

இந்தநிலையில். இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க வானுர்தி தளத்தில் விஷேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு  நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் திறந்த வாகனம் ஒன்றில் கொழும்பு காலிமுகத்திடலை வந்தடைந்தனர்.

இதேவேளை, வானுர்தி தளத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அணி வீரர்கள் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

http://www.youtube.com/embed/n1YffTzCJE4

அணியின் சகல வீரர்களதும் ஒத்துழைப்புடனே கிண்ணத்தை சுவீகரித்ததாக இலங்கை அணியின் இருபதுக்கு இருபது கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரது இருபதுக்கு இருபது ஓய்வு குறித்து சர்வதேச ஊடகத்திற்கு வெளியான கருத்து வெளிப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மஹேல ஜயவர்த்தன, தமது மற்றும் குமார் சங்கக்காரவின் ஒய்வு குறித்து ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன அதிகாரிக்ள வெளியிட்ட கருத்து தொடர்பில் கவலையடைவதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட போட்டிகளின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் முகாமையாளர் தடை விதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மஹேல ஜயவர்த்தனவின் கருத்துக்கு இணக்கம் வெளியிட்ட குமார் சங்கக்கார, தேர்வுக்குழுவின் தலைவருடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னரே சகலவற்றையும் புரிந்துக் கொண்டதாக தெரிவித்தார்.

0 comments:

Post a Comment