தெல்தோட்டையில் ஐந்தாம் தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு
தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு மலை முத்து மாத இதழின் அனுசரணையில் பிரதேச பாடசாலைகளில் இவ்வருடம் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான இலவச புலமை பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.
கருத்தரங்குகளில் மலை முத்து மாத இதழின் ஆசிரியர் எம்.கே.எம். கலீம் விரிவுரைகளை நடத்தவுள்ளார்.
பிரதேச முஸ்லிம் பாடசாலைகளுக்கான இலவச கருத்தரங்கு எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணி முதல் 4 மணி வரை தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, தமிழ் பாடசாலைகளுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 8.30 முதல் 1 மணி வரை மலை மகள் இந்து மத்திய கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.

0 comments:
Post a Comment