பெண்களின் அங்கங்களை ரசிக்கும் முச்சக்கரவண்டி சாரதிகள்: பொலிஸார் எச்சரிக்கை
பாலியல் துஷ;பிரயோகங்கள் மழிந்து வரும் இக்கால கட்டத்தில் தம்மை பாதுகாத்துக் கொள்ள தாமே முன்வர வேண்டும். காலம் கெட்டு விட்டது.
இதிலும் குறிப்பாக வாகன நடத்துனர்களின் போக்கு மிக மோசமானது.
உண்மையில் சில விஷமிகள் இன்று தம் விருப்பங்களை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் வாய்ப்பு பார்த்து கொண்டு இருக்கிறார்கள். சிறிலங்காவில் முச்சக்கரவண்டிற்குள் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தால் அவ்வாறான முச்சக்கரவண்டிகளில் பெண்களை பயணிக்க வேண்டாமென மத்துகம பிரதான பொலிஸ் அதிகாரியான பீ.லுலோவைக்கேவே மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்.
முச்சக்கரவண்டிக்குள் கண்ணாடியை பொருத்தும் முச்சக்கரவண்டி சாரதிகள், முச்சக்கரவண்டிகளில் பயணிக்கு பெண்களின் அங்கங்களை பார்த்து ரசிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே அவர் மேற்கண்டவாறு பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு கண்ணாடி பொருத்தப்பட்ட 19 முச்சக்கரவண்டிகளை தாம் மத்துகம பகுதியில் கைப்பற்றியுள்ளதாகவும் அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் முச்சக்கரவண்டியில் பக்கவாட்டு கண்ணாடிகள் இரண்டும் நடுவில் ஒரு கண்ணாடி இருப்பது மட்டும் போதுமென்றும் பொலிஸார் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

0 comments:
Post a Comment