சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, June 26, 2013

Local News Story

By on 2:11 AM
யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா சுகந்திரக்கட்சிக்கும் ஈபிடிபி கட்சிக்கும் இடையிலான 'தேர்தல் கால யுத்தம்' ஆரம்பம்


வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்துக்கும், ஈ.பி.டி.பி க்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்துள்ளன. எவ்வௌ; வேற்பாளர்களை இரண்டு தரப்பினரும் நிறுத்த இருக்கின்றனர் என்பது தொடர்பிலேயே இக்கருத்து முரண்பாடுகள் உருவெடுத்துள்ளன. ஈ.பி.டி.பி யின் சொந்த மண்ணிலே தமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை தட்டிப்பறிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தீவிரமாக இரங்கி உள்ளது. இந்த நிலையிலேயே அரசாங்கம் ஈ.பி.டி.பி யை தமது காய் நகர்தலுக்கு எவ்வாறு பயன்படுத்த போகின்றது என்பதில் தான் சுவாரஷ;யமே தங்கியுள்ளது.

யாழ்.மாவட்ட தேர்த்ல் களத்தில் சிறிலங்கா சுகந்திரக்கட்சியினருக்கும் ஈபிடிபி கட்சியினருக்கும் இடையிலான 'தேர்தல் கால யுத்தம்' ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்

யாழ்.தீவகப்பகுதியில் ஈபிடிபி அலுவலகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டள்ளது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை காலை ஈபிடிபி கட்சியின் முக்கிய தாக்குதல் உறுப்பினர்கள் யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுகந்திரக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதாக கட்சி வட்டரங்கள் தெரிவித்துள்ளன

எது எவ்வாறு இருப்பினும் ஈபிடிபிக்கும் சுகந்திரக்கட்சிக்குமிடையில் வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தேர்த்ல் கால யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவதானிக்க முடிகின்றது.

இரண்டு கட்சிக்குமிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக உள் அரசியல் பிரச்சனை என இது வர்ணிக்கப்படுகின்றதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் 53 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பதாரிகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதியும் உள்ளடங்கியுள்ளார்.

இவர் தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற யாழ்.மாநகரசபை உறுப்பினரும் சட்டவாளருமான முடியப்பு றெமீடியஸ், சாவகச்சேரி பிரதேச சபையின் ஐதேக உறுப்பினர் குமார் சர்வேந்திரன், வர்த்தகர் சதாசிவம் ராமநாதன், யாழ்.கடற்றொழிலாளர் சமாசத்தின் உதவித்தலைவர் பொன்னம்பலம், ஆகியோரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் யாழ்.மாவட்டத்தில் மட்டும் 40 விண்ணப்பங்கள் கிடைத்ததாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

'இவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை இடம்பெறும்.


சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஈபிடிபியும்இ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட இணங்கியுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி 12 வேட்பாளர்களையும், ஈபிடிபி 24 வேட்பாளர்களையும் நிறுத்தும்.' என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment