சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, June 24, 2013

Local News Story

By on 9:51 AM

கிழக்கு மாகாண அமைச்சரவை முரண்பாடுகள்; மாகாணசபை கலைக்கப்படுமா?


கிழக்கின் முதலமைச்சருடன் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையினால் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நியமிப்பதா அல்லது கலைத்துவிட்டு தோ்தல் ஒன்றை நடத்துவதா என்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசித்து வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் முதலமைச்சா் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையினான குழுவினா் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் புதிய முதலமைச்சா் தொடா்பாக பேசியதாகவும் அறியமுடிகின்றது.

கொழும்பில் நேற்றிரவு நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் கிழக்கு மாகாண சபை தொ்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தமிழத்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைத்தமால் மாகாண சபை கலைக்கப்பது எனவும் ஜனாதிபதி ஆலோசித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டன.

0 comments:

Post a Comment