மலையக பெருந்தோட்ட
தொழிலாளர்களின் நில உரிமைக்கான அமைப்பு நேற்று தெல்தோட்டை நகரில் கவனயீர்ப்பு பேரணி
ஒன்று இடம்பெற்றது.
கடந்த
200 நூற்றாண்டுகளாக நாட்டின் முதுகெலும்பாக இருந்து
வரும் இப்பெருந்தோட்ட சமூகத்திற்கு இன்று வரை தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் நில உரிமையற்ற நிலையில் லயன் அறைகளில் தமது
வாழ்க்கையை நடாத்தி வரும் இத்தொழிலாளர் வர்க்கத்திற்கு முழுமையான வீட்டுரிமை இல்லை
பெருந்தோட்டங்கள் நாளுக்கு நாள்
உப குத்தகை தனியார் மயம் என்ற போர்வையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் இருப்பிடம் அவர்களின்
தொழில் வாய்ப்பு என்பன கேள்விக்குறியாக அமைந்து வரும் நிலையில் அவர்களின் எதிர்கால நில
உரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்குடன்
மலையகத்தின் பல பகுதிகளில் இவ்வாறான கவனயீர்ப்பு பேரணிகளை மேற்கொண்டு இவ்வரசாங்கத்திற்கு தெளிவூட்டும் நோக்குடன் செயற்படுவதாக இவ் அமைப்பு
தெரிவிக்கின்றது.
இந் நிகழ்விற்கு மலையகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும்
அரசியல் தொழிற்சங்க அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் ஆதரவு நல்குமாறு அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.


0 comments:
Post a Comment