சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, July 15, 2013

தெல்தோட்டையில் பிபிஎல் இன் சாதாரண தர வழிகாட்டல் வகுப்புகள் ஆரம்பம்

By on 12:17 AM



(எம்.எஸ்.எம்.சியாட்)
தெல்தோட்டை பல்லேகம தொழில்சார் கற்கை நிறுவனத்தினால் நடத்தப்படுகின்ற சாதாரண சர மாணவர்களுக்கான விஷேட வகுப்புகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

மேற்படி வகுப்புகள் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி, எனசல்கொல்ல மத்திய கல்லூரி மற்றும் உடபிட்டிய அல்ஹுஸ்னா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் 10 ஆம், 11 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே நடத்தப்படுகின்றன.

பாடசாலை தவணை பரிட்சைகளில் பெற்ற புள்ளிகளுக்கேற்ப 3 பிரிவுகளாக பரிக்கப்பட்டு வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தவணை பரிட்சைகளில் முக்கிய காடங்களில் 60 மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் A குழு எனவும் 30 மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் B குழு எனவும் 30 இற்கும் குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள் C குழு எனவும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

A குழுவுக்கான வகுப்புகள்  பென்பியாஸ் கல்வி நிலையத்திலும் ஏனை குழுக்களுக்கான வகுப்புகள் எனசல்கொல்ல மத்திய கல்லூரி மற்றும் உடபிடிய அல் ஹுஸ்னா மகா வித்தியாலயத்திலும் நடத்தப்படுகின்றன.

இதனடிப்டையில் தெல்தோட்டை பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர்களைகொண்டு இவ்வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1 comments: