சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, July 24, 2013

மதீனா வீதியில் புலி நடமாட்டத்தால் பிரதேசவாசிகள் பீதியில்

By on 11:07 PM
சவூதி அரேபியாவின் மதீனா நகரின் அல்பரக்கா சுற்றுப்புறங்களில் புலி ஒன்று உறுமியபடி திரிந்ததால்  பிரதேசத்தில்  பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இன்நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தனது எஜமானரின் வீட்டிலிருந்து எப்படியோ தப்பி வந்த புலியைக் கண்டு பிரதேசவாசிகள் பெரும் பீதியடைந்துளனர். இதனையடுத்து பிதேச வாசிகளால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த பெலிஸார் பிரதேசத்துக்கு விரைந்துள்ளனர். இதன்போது மதீனா சுல்தானா வீதியில் சுற்றித் திரிந்த புலியை பெரும் சிரமத்திற்கு மத்தியில் மயக்கமடையச் செய்து பிடித்துள்ளனர்.

பின்னர் புலியை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது பொலிஸாரினால் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
மீண்டும் புலியை வீட்டிற்கு வெளியே பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment