சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, July 28, 2013

முஸ்லிம் காங்கிரஸ் மக்களை மடையர்களாக கணிக்கிறது - சஞ்சீவ கவிரத்ன

By on 9:18 PM
அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடி அமைச்சுப் பதவி சொகுசுகளையும் அனுபவித்துக் கொண்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்திலும் மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன் வந்திருப்பது மக்களை மடையர்களாக கணித்துள்ள ஒரு ஏமாற்றுச் செயல் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சஞ்சீவ கவிரத்ன (ஐ.தே.க) தெரிவித்தார்.
நேற்று முன்தினம் தனது இல்லத்தில் நடத்திய கூட்டமொன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இனவாத, மதவாத, தீவிரவாதிகளால் இஸ்லாமிய மக்களின் மதத்துக்கும் கலாசாரத்துக்கும் இழிவு ஏற்படுத்தும் வகையில் நாடெங்கும் உள்ள பள்ளிவாசல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் உணவு முறை, அவர்களின் கலாசாரத்துக்கு ஏற்ற உடை ஆகியவையும் இன்று பெரும் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இத்தனைக்கு நாட்டின் மிகப்பொறுப்பு வாய்ந்த நீதி அமைச்சர் பதவி வகிக்கும் ரவூப் ஹக்கீமோ, அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஏனைய முஸ்லிம் தலைமைகளோ இவற்றுக்கு எதிராக எதையுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் வரப்போகும் தேர்தலில் மரச் சின்னத்தில் போட்டியிட்டு இதன்மூலம் பெறப்போகும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் நேரடியாக அரசுக்கே போய்ச் சேரவிருக்கின்றது.
எனவே, மாகாண சபை தேர்தலில் வாக்களிக்கும்  முஸ்லிம் மக்கள் இத்தகைய ஏமாற்று சக்திகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார். 

0 comments:

Post a Comment