சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, July 14, 2013

தென்னாபிரிக்கா தொடரின் இலங்கை அணித்தலைவர் யார்?

By on 8:08 AM



தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்குமான இலங்கை அணித் தலைவர் எதிர்வரும் செவ்வாய் கிழமை அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சிறிலங்கா கிரிக்கட்டின் தெரிவுக்குழு செவ்வாய் கிழமை கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரிபியன் தீவுகளில் இடம்பெற்ற முக்கோண கிரிக்கட் தொடரின், இந்திய அணிக்கு எதிரான இறுதி போட்டியின் போது, பந்துவீச்சு வீதம் குறைவாக காணப்பட்டமைக்காக, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ{க்கு இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அஞ்சலோ மெத்தீவ்ஸால் விளையாட முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த போட்டிகளுக்கான அணித் தலைவர் குறித்து எதிர்வரும் செவ்வாய் கிழமை அறிவிக்கப்படும் என்று, சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment