சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, August 11, 2013

வாடியகொட- தெல்தோட்டை வீதியை புணரமைக்க கோரி ஆர்பாட்டம்

By on 3:39 AM

(M.S.M. ஸியாத்)

வாடியகொட- தெல்தோட்டை வீதியானது கடந்த பல வருடகாலமாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. பல அரசியல்வாதிகள் பருவகால ஓட்டுத் தேவைக்காக இப்பாதையில் வந்து சென்றாலும் இதனை புணர்-நிர்மானித்து கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாரான ஒரு நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் அவசர சிகிச்சை நோக்கம் கருதி கொண்டு செல்லப்பட்ட சகோதர இன வாளிபர் ஒருவர் பாதையின் சீரற்ற தன்மைமயால் உரிய நேரத்துக்கு தெல்தோட்டை வைத்தியசாலையில் ஒப்படைக்க முடியாமல் பரிதாபகரமாக உயிரிழக்கவேண்டிய துரதிஷ;ட நிலை உருவானது. இந்த பின்னனியிலே பள்ளேகம முஸ்லிம், சிங்கள மக்கள் மற்றும் வாளிபரகள் இணைந்து இப்பாதையை புணரமைத்து கோரியும், பள்ளேகம கிராமிய வைத்தியசாலைக்கு முழு நேர வைத்தியர் ஒருவரை பெற்றுத்தர கோரியும் ஆகஸ்ட் 08, 2013 இவ் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட மஹஜரை தெல்தோட்டை பிரதேச செயலக அதிகாரிகள் கையேற்ற பின்னரே இவ்வார்பாட்டம் முடிவுக்கு வந்தது.http://www.youtube.com/watch?v=UbNio2ewlxI

1 comments: