சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, August 27, 2013

உயிர் நீத்த இஸ்லாமிய உள்ளங்களுக்காக வேண்டி ஜனாஸா தொழுகைகள் நாடளாவிய ரீதியில்

By on 2:33 AM


சிரியா ,எகிப்து ,மியன்மார் போன்ற இஸ்லாமிய நாடுகளில் உயிர் நீத்த இஸ்லாமிய உள்ளங்களுக்காக வேண்டி ஜனாஸா தொழுகைகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை வடகேபொத ஜும்ஆ பள்ளிவாயலிலும் ஜும்ஆ தொழுகையை அடுத்து பொதுவான ஜனாஸா தொழுகை இடம்பெற்றது.அனைத்து கிராம வாசிகளும் இத்தொழுகையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாரமும் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து தெல்தோட்டை பிரதேசத்தில் உள்ள பல பள்ளிவாயல்களில் ஜனாஸா தொழுகை இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வனஹபுவ பள்ளிவாயலிலும் இவ்வாரம் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஜனாஸா தொழுகை இடம் இடம் பெற உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

0 comments:

Post a Comment