சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, August 28, 2013

சமகால முஸ்லிம் உலகு தொடர்பான சிறப்பு சொற்பொழிவு

By on 5:49 AM


File


 
தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பு மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி நிர்வாக சபை, உலமா சபை மற்றும் சமூக நிறுவனங்களுடன் இணைந்து தெல்தோட்டை பிரதேச மக்களின் குறிப்பாக மாணவர்களின் கல்வி, கலாசாரம், சமூக அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துவருகின்றது.

அந்தவகையில் இப்பிரதேச மாணவர்கள் மத்தியில் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் க.பொ.த சா/த, உ/த மாணவர்கள் தமக்கான ஒரு சரியான துறையை தெரிவு செய்துகொள்வதற்கான வழிகாட்டலை வழங்கவும் அவர்களிடமுள்ள தலைமைத்துவ, ஆளுமைப் பண்புகளை விருத்திசெய்யும் நோக்கில் எதிர்வரும் ஆகஸ்ட் 31, செப்டெம்பர் 01 ஆகிய திகதிகளில் இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்சி நெறியொன்று  (Leadership Training programme)  நடாத்தப்பட திட்டமிடப்பட்டள்ளது.

இப்பயிற்சிநெறித் தொடரின் இரண்டாம் நாளான செப்டெம்பர் 01 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை சமகால முஸ்லிம் உலகம் தொடர்பாக பொதுமக்களுக்கான ஒரு விசேட சிறப்பு சொற்பொழிவு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு சொற்பொழிவை மீள்பார்வை பத்திரிகையின் ஆசிரியரும் சர்வதேசப் பார்வை சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் சர்வதேச அரசியல் ஆய்வாளருமான அஷ் செய்க் ரவூப் செய்ன் நிகழ்த்தவுள்ளார். செப்டெம்பர் 01 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு எல்லோரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

எம்.ஜே.எம். ஜெஸீம்

0 comments:

Post a Comment