கெக்கிராவ திப்பட்டுவெவயில் ஏ 9 வீதியில் வாகன விபத்ததொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுறத்திலிருந்து கண்டிநோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டி ஒன்றும் இராணுவத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியொன்றும் மோதுன்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அனுராத புரத்திலிருந்து கண்டிநோக்கி வேகமாக சொகுசு பஸ் சென்ற வேலையில் எதிர் திசையில் இராணுவ ஜீப் வேகமாக வந்துள்ளது. இதன்போது துவிச்சக்கர வண்டி ஒன்று குருக்கு வீதியில் நுளைய முற்பட்டுள்ளது. இந்தவேளையில் இராணுவ வண்டி ஓட்டுனர் துவிச்சக்கரர வண்டி விபத்துக்குள்ளாவதை தடுக்க தனது வாகணத்தை வந்த வேகத்தில் நிறுத்த முற்பட்டுள்ளா். இதன்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடத்து ஸ்தலத்துக்கு விரைந்த கெக்கிராவ பொலிஸார் விராணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பஸ் மற்றும் ஜீப் வண்டிகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் உயிர்சேதமே காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
0 comments:
Post a Comment