தெல்தோட்டை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். தெல்தோட்டை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது.
தெல்தோட்டை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 1071.98 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
0 comments:
Post a Comment