கண்டி வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இன்றும் (15) தொடர்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று பகல் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெறும் சந்திப்பை எடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கண்டி கிளை தலைவர் சமன் கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காவிட்டால் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவர் என அவர் குறிப்பிட்டார்.
கண்டி வைத்தியசாலை ஓய்வு அறையை மையப்படுத்தி தாதியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டின் காரணமாக இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு முன்னரும் இது குறித்த முரண்பாடுகள் தோன்றியதாகவும் நேற்று (14) தொடக்கம் பணிப்பகிஸ்கரிப்பை ஆரம்பித்ததாகவும் சமன் கருணாதிலக தெரிவித்தார்.

0 comments:
Post a Comment