(ஊருபலாய் உஸ்தா)
கடந்த பாராளு மன்ற தேர்தலின் போது கண்டியிலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பாராளுமன்றிற்கு தெரிவு செய்தால் கண்டிக்கு முஸ்லிம் பாரசாலையொன்றை தருவதாக (பொய்) வாக்குறு அளித்தது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி அரசாங்கம். ஏமாந்த நம் சமூகமும் பைஸர் முஸ்தபாவை பாராளுமன்றுக்கு அனுப்பி வைத்தது. பாவப்பட்ட சமூகம் இன்னும் ஏமாந்துகொண்டு இருக்கிறது. ஒருவேலை நாம் ஏமாந்த சமூகம் என்று அரசாங்கம் கருதி விட்டதே....
முஸ்லிம் பாடசாலை விடயத்தில் சமூகத்தை ஏமாற்றிய அரசாங்க தரப்பினர் தற்போது புதிய தலைப்பொன்றை கண்டு பிடித்து விட்டனர். அது தான் மத்திய மகாண சபை முஸ்லிம் விவகார மற்றும் முஸ்லிம் கல்வி அமைச்சு. இப்போ இது தான் அரசு தரப்பினரின் கருபொருள். நாமெல்லாம் சேர்ந்து கண்டியிலிருந்து முஸ்லிம் பரதிநிதியை அரசு சார்பாக மத்திய மாகாண சபைக்கு அனுப்பினாள் அப்படி ஒரு அமைச்சு பதவி கிடைக்குமாம்.
அரசாங்கம் தொடர்ந்தும் நம் சமூகத்தை ஏமாற்ற நிணைக்கிறது. நம் சமூகமும் ஏமாறத் தான் தயாராக இருக்கிறதா... இந்த சந்தர்ப்பத்தில் கொஞ்சம் விழித்துக்கொள்வது நம் சமூகத்திற்கு நல்லது.
இப்போ யார் விழித்துக்கொள்வது என்பது ஒரு கேள்வி நம்மில் எழும். ஏன் நமக்கு மற்றவர்களை நோக்கி கையை நீட்டித் தானே பழக்கம். அவங்க விழித்துக்கொண்டா போதும். நாம் இன்னும் கொஞ்சம் நித்திரையில் ஆழ்ந்து விடலாம். எல்லாத்துக்கும் காலம் நேரம் வரும் என்ற நினைப்பை கொஞ்சம் தூக்கிப்போட்டு விட்டு கலத்தில் குதிக்க வேண்டும்.
தொடர்ந்தும் நம்மை ஏமாற்ற முடியாது என்பதை கொஞ்சம் அல்ல உரத்து அரசாங்கத்திற்கு புரியவைக்க வேண்டும். முஸ்லிம் பாடசாலை விடயத்தில் எம்மை ஏமாற்றி வாக்குகளை பெற்ற அரசுக்கு நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும். இம்முறை புதிய மாற்றத்தை ஏற்படுத்தித் தான் பார்ப்போமே. கொஞ்சம் எதிரணியினருக்கு சந்தர்ப்பம் வழங்கித்தான் பர்ப்போம்.
இப்போ எல்லோம் கொஞ்சம் துள்ளி விட்டு தேர்தலுக்கு பின்னர் அடங்கி விடுவது வழக்கமாக்கிவிட்டோம். இதனை நாம் மாற்றிக்கொண்டு சமூக உணர்வுன் நமது அரசியல் கடமையை முன்னெடுக்க வேண்டும் ஏனெனில் நாம் தான் ஆட்சியாளர்கள். அரசியல் வாதிகள் நமக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அடங்கி போகாமல் ஆக்கபூர்வமாய் செயற்படத் தொடங்குவோம்.

0 comments:
Post a Comment