சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, August 5, 2013

நியூசிலாந்து பால்மாவில் பக்டீரியா கலப்படம்: நுகர்வோருக்கு எச்சரிக்கை

By on 9:31 AM
நியுசிலாந்தின் மிகப் பெரிய பால்மா நிறுவனத்தின் குழந்தைப் பால் மா உள்ளிட்ட பொருட்களில் பாட்டுலிஸம் என்ற நோயைத் தரவல்ல பாக்டீரியா கிருமி கலந்திருக்கலாம் என அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

பாட்டுலிஸம் என்பது சில நேரம் உயிரிழப்பையும் ஏற்படுத்தவல்ல ஒருவகை வாத நோய்.

உடல்நலம் பாதிப்புள்ள பால்மா பொருட்களை கடைகளில் இருந்து உடனடியாக திரும்பப் பெற சீனா உத்தரவிட்டுள்ளது.

நியூஸிலாந்திலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது தீவிர பரிசோதனைகளுக்கு அது  உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், சவுதி அரேபியா

உட்பட பல வெளிநாடுகளிலும் தமது வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளதாக நியுஸிலாந்தின் முன்னணி பால் உற்பத்திப் பொருட்கள் நிறுவனமான ஃபோன்டெர்ரா கூறுகிறது.

0 comments:

Post a Comment