சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, August 21, 2013

ஆளும் கட்சி வேட்பாளர்கள் அரச சொத்துக்கைள துஸ்பிரயோகம் செய்கின்றனர் – TISL

By on 9:57 PM

ஆளும் கட்சி வேட்பாளர்கள் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதாக இலங்கை ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அரச பணத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

பிரச்சாரப் பணிகளுக்காக பொதுப் பணத்தை பயன்படுத்துவதுடன், வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ட்ரான்பெரன்சி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ். ராணுகே தெரிவித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இம்முறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 99 வீதமானவர்கள் இன்னமும் சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை ஒப்படைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தேர்தல் சட்டங்களுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சொத்து விபரங்களை வெளியிடாது வெற்றியீட்டும் வேட்பாளர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்காமல் இருக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வீதமான வேட்பாளர்களே சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

0 comments:

Post a Comment