முஸ்லிம் பழமைவாத அடிப்படைவாதிகள் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் இலங்கை எதிர்நோக்கும் மற்றுமொரு ஆபத்து என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டிருந்த கருத்து இலங்கையின் தேசிய மட்டத்திலான தலைவர் ஒருவர் வெளியிட்ட மதிப்பிடத்தக்க கருத்து என பொதுபல சேனா தெரிவித்துள்ளது. கொழும்பில் ஆரம்பமான இராணுவ கருத்தரங்கில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தமை தொடர்பில் பொதுபல சேனா இதனை கூறியுள்ளது. சுமார் ஒரு வருடகாலம் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் அடிப்படைவாதம் மற்றும் பழமைவாதம் ஆகியவற்றின் ஆபத்து தொடர்பாக நிலைப்பாட்டை கொண்டு போராடியமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியெனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பு என குற்றம் சுமத்திய போலி அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் சிறந்த பதிலை வழங்கியுள்ளார் என்பது அந்த அமைப்பின் கருத்தாகும்.
40 வருடங்களுக்கு முன்னர் தூரநோக்குடன் விடுதலைப்புலிகளின் அடிப்படைவாதத்தை அறிந்து கொண்டிருந்தால் 30 வருட போரின் ஆபத்தான பிரதிபலன்களை அனுபவிக்காத முன்னேற்றமான நாடாக இலங்கையை மாற்றியிருக்கலாம். தற்போது முஸ்லிம் அடிப்படைவாதத்தை அடையாளம் காணாது விட்டால் மீண்டும் 20 வருடங்களில் கவலையளிக்கும் சூழல்கள் ஏற்படும். இதனால் முன்கூட்டியே முஸ்லிம் அடிப்படைவாதத்தை அடையாளம் கண்டு கொண்டமையானது நாடு செய்த பாக்கியம் என கருத வேண்டும் என்றும் பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment