சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, September 27, 2013

விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு கண்டி மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் போர்க்கொடி!

By on 5:09 AM




மத்திய மாகாண சபை தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை மீள எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேட்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட எம்எஸ்.ஜவாஹிர் சாலி, எப்.எம்.முபாறக், ஐ.ஐனுதீன், ஜே.எம்.முஹா்ரிக், எச்.எம்.எம்.யாசீன், எம்.எப்.எப்.பாரிசா, எம்.பி.றமீஸ், எம்.யு.அனீஸ்தீன் மற்றும் எம்.ஏ.எம்.றசான் ஆகிய ஒன்பது வேட்பாளர்களினாலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலிக்கு குறித்த ஒன்பது வேட்பாளர்கள் கையொப்பமிட்டு கடிதமொன்றை நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளதாக வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.


மத்திய மாகாண சபை தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தைப் பற்றுக் கொண்டமையும் அதன் முதன்மை வேட்பாளர் உவைஸ் ஹாஜியார் வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment