இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் அரபு நாடுகளில் சஞ்சிகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில அரபு நாடுகளின் விமான நிலையங்களில் சஞ்சிகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பில் கண்காணிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்கள் முஸ்லிம் பெண்களை தாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விநியோகம் செய்யப்படும் சஞ்சிகையை ஜனாதிபதி, ஊடகவியலாளர்களிடம் காண்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment