சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, September 3, 2013

தம்புள்ளையில் புனிதப் பூமி நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரி அனாமதேய கடிதம்!

By on 2:54 AM
தம்புள்ளைப் புனிதப்பூமி பிரதேசத்திலுள்ள 6070 குடும்பங்களின் வாக்குகளுக்கு மயங்கி மரக்கல முஸ்லிம்களுக்கு பள்ளிவாயலும் தமிழர்களுக்கு கோவிலும் கட்டிக்கொடுத்த அதே அரசியல் வாதிகள் தற்பொழுதும் வேறு ஒரு இடத்தில் இவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கட்டும் என வேண்டுகோள் விடுக்கும் அனாமதேய கடிதம் ஒன்று தம்புள்ள பிரதேசத்திலுள்ளவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 

தம்புள்ளைப் புனிதப் பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து விநியோகிக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பொது ஹெலகம் எனும் பெயரில் இக்கடிதம் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment