சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 5, 2013

அமெரிக்க செனட் சபை சிரியாவை தாக்க ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது

By on 5:48 AM

இரசாயன ஆயுதங்களை கொண்டு சிரியா தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டை  முன்வைத்து  சிரியா மீது தாக்குதல் நடாத்த  அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளினதும்  ஆதரவை  பராக் ஒபாமா கோரியுள்ளார் .


இந்நிலையில் நேற்று அமெரிக்க காங்கிரசின் முக்கிய சபையான செனட் சபை  சிரியா மீது போர் தொடுக்க ஒபாமாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒபாமாவின் இந்த வேண்டுகோளுக்கு செனட் சபையின் வெளிநாடுகளுக்கான விவகார சபையின்     10 உறுப்பினர்களின்  7 பேரின் ஆதரவை   ஒபாமா பெற்றுள்ளார். 7 வாக்குதல் அவருக்கு ஆதரவாக கிடைத்துள்ளது .


சிரியாவின் மீது 60 நாட்கள்  மற்றும் மேலதிக 30 நாட்கள் தாக்குதலை  நடாத்தவும் தரைப்படையை  பயன்படுத்தக்கூடாது என்றும் அது அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து இந்த தீர்மானம் முக்கிய சபையான செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். பின்னர் அடுத்த வாரம் அதன் மீதான வாக்கெடுப்பு நடக்கும்.


பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரா கமிட்டியில் விசாரணை நடந்துவரும் நிலையில் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையிலும் அந்த தீர்மானம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment