(தகவல்-M.S.M.ஸியாத்)
இந்த அரசின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பல முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துக் கொண்டிருக்கின்றன.
எனினும்,தெல்தோட்டை பிரதேசத்தில் மிகக்குறைவான அபிவிருத்தி பணிகளே இடம்பெற்றுள்ளன' என்று முன்னால் மாகாண சபை உறுப்பினறும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை வேற்பாளருமான ரிஸ்வி பாரூக் தெல்தோட்டை, வனஹபுவயில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.இந்த அரசின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பல முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துக் கொண்டிருக்கின்றன.
அவர் மேலும், உரையாற்றுகையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்திய மாகாண முஸ்லிம் கல்வி அமைச்சுப் பதவியானது முதலமைச்சரின் கீழ் இருந்து வருவதாகவும் அதனை ஒரு முஸ்லிம் அமைச்சர் பெறுவதன் மூலம் முஸ்லிம் பாடசாலைகளில் நிழவும் பல குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
இப்பிரசார கூட்டத்தில் மாகாண சபை வேற்பாளர் ஹம்ஜாட், பாத்த ஹேவாஹெட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் மஹிந்த அபேகோன் அவர்களின் செயலாளர் திரு. கோசல ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

0 comments:
Post a Comment