சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, September 24, 2013

தெல்தோட்டை பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

By on 8:03 PM
(ஸியாத் மெடிஹேன)


மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் அவர்களின் சொந்த நிதியத்திலிருந்து தெல்தோட்டை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் வைபவமொன்று 19.09.2013 அன்று வனஹப்புவயில் இடம்பெற்றது. இதன்போது பின்வரும் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.


01) அந்நூர் விளையாட்டு கழகம் - வனஹப்புவ
02) கொங்கோட் விளையாட்டு கழகம்-முஸ்லம் கொலனி
03) அல் ஹூதா விளையாட்டு கழகம் - மெடிஹேன
04) பல்ளேகம விளையாட்டு கழகம்
05) வடகேபொத விளையாட்டு கழகம்
06) பீளிகர விளையாட்டு கழகம்
07) உடுதெனிய விளையாட்டு கழகம்





இந்நிகழ்வில் உவைஸ் ஹாஜியார் நிதியத்தின் தலைவர் உவைஸ் ஹாஜியார், அவரின் சகோதரர் நஸீர் ஹாஜியார், அந்தரங்க செயலாளர் ஜனாப் பாரூக் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெல்தோட்டை இணைப்பாளர் ஜே.சுஹைப்(ஜே.பி) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

0 comments:

Post a Comment