சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, September 30, 2013

பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கக்கூடாது: சவுதி அரேபிய மௌலவி

By on 5:32 AM




முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. எனவே பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.



இதற்கிடையே, அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக கடந்த 2009–ம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் பெண்களுக்கான சுதந்திரத்தை மன்னர் அப்துல்லா கூடுதலாக வழங்கி வருகிறார்.


அதுபோன்று பெண்கள் கார் ஓட்டும் உரிமையும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற ஒக்டோபர் 26–ந் திகதி பெண்கள் கார் ஓட்ட தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது.


இந்த நிலையில், பழமை வாத மதகுருவும், 21 பேர் அடங்கிய சீனியர் கவுன்சில் குழு உறுப்பினருமான சேக் சலே அல் – லோகைடன் அரசுக்கு பத்வா (ஆணை) பிறப்பித்துள்ளார்.


அதில் சில அறிவுரைகளும் கூறியுள்ளார். பெண்கள் கார் ஓட்டுவது தேவையில்லாதது. அதனால் அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.


கார் ஓட்டும்போது அவர்களின் இடுப்பு எலும்பு மேல் நோக்கி நகருகிறது. இதனால் பெண்களின் கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்படும். அது குழந்தைகள் வளர்ச்சியிலும் பாதிப்பை உருவாக்கும் என பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்ககூடாது. அதற்கான தடையை நீக்க கூடாது என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment