ஐக்கிய நாடுகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கடுமையான இனவாத மற்றும் பிரிவினைவாத கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் இது தெளிவாகியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் கூறினார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று தசாப்தங்களுக்கு பிறகு வடக்கில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முயற்சிக்கும் தருணத்தில் அதனை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் மீண்டும் அந்த மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்க முயன்று வருகின்றனர்.
முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களின் பாரம்பரிய வரலாற்று தாயகம் என்றும் முழுமையான சுயாட்சியை பெறவேண்டும் என்றும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருப்பது தேசிய ஐக்கியத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
நவநீதம்பிள்ளை இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர் வெளியிடப்பட்டிருக்கும் இந்த தேர்தல் கொள்கை விளக்கம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய தரப்பினர் கடும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

0 comments:
Post a Comment