2014 கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சைகள் நாளை நடத்தப்படவுள்ளன.
நயினாதீவு, காரைநகர், வேலனை உள்ளிட்ட நாடுபூராகவும் உள்ள 1,114 பரீட்சை மத்திய நிலையங்களில், நாளை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சையில் 24,888 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளும், 101,449 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும், 11,505 ஆங்கில மொழிமூல பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.
இதன்படி மொத்தமாக 137,842 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் 0112 784 208 மற்றும் 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவிக்க முடியும்.

0 comments:
Post a Comment