சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, October 22, 2013

அஸாத் சாலியின் கார் விவகார வழக்கிலிருந்து அஜ்மல் விடுதலை

By on 11:55 PM

மத்திய மாகாண சபை உறுப்பினரான அசாத் சாலியினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரான அஜ்மல் மவ்ஜுத் என்பவருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கிலிருந்து அஜ்மல் மவ்ஜுத் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு கோட்டை நீதவானினாலேயே அவர் நேற்று செவ்வாய்க் கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.


2.3 மில்லியன் பெறுமதியான தனது காரை விற்றுத்தரும்படி அஜ்மல் மவ்ஜுதிடம் 2005 ஆம் ஆண்டு கொடுத்ததாகவும் ஆனால் காரை விற்று பணம் பெற்ற மவ்ஜுத் தனக்கு அப்பணத்தை தரவில்லை என அசாத் சாலி முறைப்பாடு செய்திருந்தார்.


ஆனால் சந்தேகத்துக்கு இடமின்றி இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறிய நீதவான் அஜ்மல் மவ்ஜுதை வழக்கிலிருந்து விடுவித்தார்.

0 comments:

Post a Comment