சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, October 23, 2013

சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு; ஆளும் கட்சி உறுப்பினரக்கு ஏழு வருட சிறை

By on 9:23 PM

ஆண் சிறுவர் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு ஏழாண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேருவலை பிரதேச சபையின் உறுப்பினர் ரத்னசிறி களுபெருமவுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு மத்துகம பகுதியில் வைத்து அவர் சிறுவர் ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நேற்று களுத்துறை மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவரின் குடும்பத்துக்கு 6 லட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

0 comments:

Post a Comment