'கிரிக்கெட்டின் பைபிள்’ என்று அழைக்கப்படும் விஸ்டன் பத்திரிகை
தொடங்கப்பட்டு 150–வது ஆண்டுக்கு அடியெடுத்து வைப்பதையொட்டி டெஸ்ட்
போட்டியில் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது. கடந்த 136
ஆண்டுகளில் இதுவரை 2098 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.
ஒட்டுமொத்த அளவில் அலசி ஆராய்ந்து, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது. 40 வயதான தெண்டுல்கர் 200–வது டெஸ்டுடன் விடைபெறும் வேளையில் அவருக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.
அதே சமயம் பிரையன் லாரா, ரிக்கிபாண்டிங், காலிஸ், சுனில் கவாஸ்கர், கபில்தேவ் போன்றவர்களுக்கு அணியில் இடமில்லை. விஸ்டன் அறிவித்துள்ள உலக டெஸ்ட் லெவன் அணிக்கு டான் பிராட்மேன் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அந்த கவுரவ அணி வருமாறு:–ஜேக் ஹோப்ஸ் (இங்கிலாந்து), டபிள்யூ.ஜி.கிரேஸ் (இங்கிலாந்து), டான் பிராட்மேன் (அவுஸ்திரேலியா, கேப்டன்), சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கேரி சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ஆலன் கினோட் (இங்கிலாந்து), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா), மால்கம் மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்), சிட்னி பார்னெஸ் (இங்கிலாந்து).

0 comments:
Post a Comment