பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை முன்னிட்டு கல்வி அமைச்சினால் தேசிய ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவுப்போட்டியில் மத்திய மாகாண சம்பியன் அணியான தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய அமைப்புகள் மாநாட்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற பொது அறிவுப்போட்டிகள் முதற்கட்டமாக வலய மட்டத்தில் நடத்தப்பட்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. தொடர்ந்து இரண்டாம்கட்டமாக மாகாண மட்டத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு தேசிய மட்டபோட்டிகளுக்காக ஒன்பது பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டன.
தேசிய ரீதியில் மாகாண அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள்
மத்திய மாகாணம் - கண்டி, தெல்தோட்டை முஸ்லிம் கல்லூரி
மேல் மாகாணம் - பாணந்துறை, ஜீலான் மத்திய கல்லூரி
வட மாகாணம் - யாழ்., சென் பற்றிக் கல்லூரி
கிழக்கு மாகாணம் - திருகோணமலை, சென்.மேரிஸ் கல்லூரி
தென் மாகாணம் - காலி, சவுத்லேண்ட் கல்லூரி
வடமத்திய மாகாணம் - பொலனறுவை, ஆனந்த பாலிகா தேசிய பாடசாலை
வடமேல் மாகாணம் - குருநாகல், சாரணாஸ் மத்திய கல்லூரி
ஊவா மாகாணம் - பதுளை, துட்டகைமுனு மத்திய கல்லூரி
சப்ரகமுவ மாகாணம் - இரத்தினபுரி, எஹலியகொட தேசிய பாடசாலை
தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் உட்பட 9 பாடசாலைகளுக்குமான முதலாவது சுற்றுப்போட்டிகள் மஹரகம தேசிய கல்வி நிருவகத்தில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்றது.
முதலாவது சுற்றின்போது தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி வடமேல் மாகாண அணியான சாரணாஸ் கல்லூரியை வெற்றிகொண்டது.
இதேவேளை பாணந்துறை ஜீலான் கல்லூரி முதல்சுற்றின்பேதுவெளியேறியது.
பின்னர் நேற்றைய தினம் காலிருதிச் சுற்று இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது. இதன்போது மத்திய மாகாண அணியான தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி சப்ரகமுவ மாகாண அணியான எஹலிய கொட தேசிய கல்லூரியை வெற்றிகொண்டு அறையிருதிக்கு தெரிவானது.
இதனையடுத்து இன்றைய தினம் இடம்பெற்ற அறையிருதிப்போட்டியில் கிழக்குமாகாண அணியான சென்மேறிஸ் அணியிடம் தோல்வியை தழுவியதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது. அத்தோடு பொதுநலவாய பொதுஅறிவு போட்டியில் ஒரு அணி சார்பாக தனி நபர் பெற்ற அதி கூடிய புள்ளியை தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஏ.எல்.எப்.ஹஸ்னா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொது அறிவுப்போட்டிக்கு தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி சார்பாக ஏ.சீ.எப்.நதா, எம்.ஏ.எப்.ரிஸ்னா, எச்.எல்.எப்.ஹஸ்னா, எம்.என்.எப்.பிர்னாஸா, எம்.பி.எப்.பஸ்மிலா ஆகியோர் பங்குபற்றினர்.



0 comments:
Post a Comment