தனியார் பஸ் கட்டணங்கள் 7 வீதத்தினால்
அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க
தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த பஸ் கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையில் புதிய பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இவ்விடயம் தொடர்பில் நாளை (13) விசேட கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எந்தவித அறிவித்தலும் தமக்கு விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் நூற்றுக்கு 7 வீத கட்டண அதிகரிப்பை தாம் கோரியதாகவும் அதற்கு தனியார் போக்குவரத்து அமைச்சர் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் கெமுனு கூறினார்.
நூற்றுக்கு ஏழு வீத கட்டண அதிகரிப்பு தொடர்பான பிரச்சினை உள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டத்தின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் கெமுனு மேலும் தெரிவித்தார்.
எனினும் நூற்றுக்கு 10 வீதமாக கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தில் பிரதான செயலாளர் அஞ்சன பிரியங்ஜித் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கு ஏழு வீத கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழு வீத கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள தயாரில்லை எனவும் உரியவர்கள் இதற்கு தீர்வு வழங்காவிடில் நீதிமன்றை நாடவுள்ளதாகவும் அஞ்சன பிரியங்ஜித் லேம் தெரிவித்தார்.
கட்டண
சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு
தனியார் பேரூந்து கட்டணங்களை 7 சதவீதத்தால்
அதிகரிக்கப்படுவதற்கு எதிராக சகல பேரூந்து சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்று இலங்கை தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
7 சதவீத அதிகரிப்பை தமது சங்கம் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனியார் பேரூந்து உரிமையார் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ணவும், இந்த அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பேருந்து கட்டணங்களை 7 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும், இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும், தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இன்று பகல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நொவம்பர்
மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பேருந்து கட்டணங்களை 7 சதவீதத்தால்
அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாக, தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த குழு சதவீத அதிகரிப்புக்கு தாங்கள் இணங்கப் போவதில்லை என்று, இலங்கை தனியார் பேருந்து சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் 200 கிலோமீற்றருக்கும் அதிகமான தூர இடைவெளியை கொண்ட தொடரூந்து நிலையங்களுக்கு இடையிலான தொடரூந்து பயணக் கட்டங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி தொடரூந்து சேவையின் மூன்று வகுப்புகளுக்கும் 80 ரூபா வீதம், கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடரூந்து திணைக்களத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நொவம்பர் மாதம் 1ம் திகதி முதல் இந்த பயணக்கட்டணம் அதிகரக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரூந்து கட்டணங்களுக்கு இடையில் காணப்படுகின்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான தொடரூந்து கட்டணமாக 300 ரூபா அறவிடப்படுகிறது.
எனினும் கொம்பனி வீதியில் இருந்து கிளிநொச்சிக்கான தொடரூந்து கட்டணமாக 220 ரூபா மாத்திரமே அறவிடப்படுகிறது.
இவ்வாறான நிலைமையை சீர் செய்யும் பொருட்டே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தொடரூந்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment