தெல்தோட்டை பிரதேசத்துக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வுகளை தேடி அறியும் முயற்சியில் ஓர் அங்கமாக நடந்து முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு தெல்தோட்டை வொய்ஸ் ஓர் ஆய்வினை மேற்கொண்டது.
இதில் தெல்தோட்டை அல்லாத பிரதேசங்களிலும் தெல்தோட்டை மண் பெருமை பேசப்பட்டுக்கொண்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலும் தெல்தோட்டையின் பெயர் பேசப்பட்டதை கேட்கக்கூடியதாக இருந்தது.
தெல்தோட்டை பூர்வீகமாக கொண்ட முஹம்மட் முபீன் பாத்திமா ஹப்ஸா எனும் மாணவி நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளை பெற்று, கொழும்பு மாவட்ட தரப்படுத்தலில் 7ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
இதே வேளை தெல்தோட்டையை பூர்வீகமாக கொண்ட முஹம்மட் சபருல்லாஹ் பாத்திமா ரீமா எனும் மாணவியும் 184 புள்ளிகளைப் பெற்று தெல்தோட்டை மண்ணின் வாசணையை உலகறிய வைத்துள்ளார்.
இதே வேளை தெல்தோட்டை எனசல் கொல்ல மத்திய கல்லூரி மாணவன் எம். எம். முஷாப் 180 புள்ளிகளையும், தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி என்.ஏ.எப். சுமையா 177 புள்ளிகளையும், உடபிடிய அல்-ஹுஸ்னா மு.ம.வி மாணவன் ஸாஜா இக்பால் 177 புள்ளிகளையும் பெற்று தெல்தோட்டை பிரதேச முஸ்லிம் பாடசாலைகளில் அதிக புள்ளிகளை பெற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே, தெல்தோட்டை பிரதேசத்தின் நாமத்தை வெளியுலகுக்கு எடுத்துச் சென்று பெருமை சேர்த்த இளம் நெஞ்சங்ளுக்கு தெல்தோட்டை வொய்ஸ் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
0 comments:
Post a Comment