சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, October 23, 2013

பாடசாலை மாணவர்களுக்கு பேஸ்புக் தடை

By on 9:57 PM

பெங்களூரில் உள்ள சில தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பேஸ்புக்கில் பாவிப்பதற்கும கணக்கு தொடங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக சிலர் போலி பெயர்களில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி, பிறருடைய புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, பேஸ்புக் மாணவர்களின் கல்வியையும் பாதிக்கிறது. பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவர்கள் பேஸ்புக்கில் மூழ்கி விடுகிறார்கள் என்பதால், பெங்களூரில் உள்ள சில தனியார் பள்ளிகள், மாணாக்கர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை விதித்துள்ளது.

இதில் குறிப்பாக டெல்லி பப்ளிக் ஸ்கூல், செயிண்ட் ஜான்ஸ் உயர்நிலைப்பள்ளி, வித்யா நிகேதன் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து மாணாக்கர்களும் உடனடியாக தங்களது பேஸ்புக் கணக்குகளை அழித்து விடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment