சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, October 26, 2013

SOUTH AFRICA அபார வெற்றி: பாகிஸ்தான் படுதோல்வி

By on 11:58 PM
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பாகிஸ்தான், தென் ஆப்ரிக்க அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின.


அபுதாபியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடந்தது.


முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 99 ஓட்டங்களும், தென் ஆப்ரிக்கா 517 ஓட்டங்களும் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் மிஸ்பா 42 ஓட்டங்களுடனும், ஆசாத் ஷபிக் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


இதனையடுத்து நேற்று நடந்த நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மிஸ்பா, ஆசாத் ஷபிக் ஜோடி பொறுப்பாக ஆடியது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்த மிஸ்பா டெஸ்ட் போட்டியில் 21வது அரைசதம் அடித்தார்.


மறுமுனையில் அபாரமாக ஆடிய ஆசாத் ஷபிக், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 197 ஓட்டங்கள் சேர்த்த போது மிஸ்பா 88 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார்.
பொறுப்பாக ஆடிய ஷபிக் 130 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.


இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 326 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் இம்ரான் தாஹிர், டுமினி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 1-1 என சமன் செய்தது. ஆட்டநாயகன் விருதை தென் ஆப்ரிக்க அணியின் அணித்தலைவர் ஸ்மித் வென்றார்.


தொடர் நாயகன் விருது தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சுக்கு வழங்கப்பட்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் ஒக்டோபர் 30ல் சார்ஜாவில் நடக்கிறது.









0 comments:

Post a Comment