கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியை எதிர்வரும் மூன்று நாட்கள் பொது மக்கள் பார்வைக்காக திறக்க பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி நாளை (22) தொடக்கம் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கட்டுநாயக்க அதிவேக வீதியை பொது மக்கள் பார்வையிட முடியும்.
குறித்த நாட்களில் அதிவேக வீதியில் நடந்து செல்ல பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
அதிவேக வீதி திறந்தவுடன் பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க செல்லும் கார், ஜீப் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு 300 ரூபா அறவிட பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜா-எலவில் இருந்து கட்டுநாயக்கவிற்கும் ஜா-எலவில் இருந்து பேலியகொட வரையும் செல்லும் சிறிய ரக வாகனங்களுக்கு 200 ரூபா அறவிடவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க அதிவேக வீதியில் ஒரு மரதன் ஓட்டப் பந்தயமும் யானை பந்தயம், கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், முச்சக்கர வண்டி பந்தயம், காத்தாடி போட்டி மற்றும் வானவேடிக்கை உள்ளிட்ட கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment