பள்ளேகம PPLI னால் தெல்தோட்டை பிரதேசத்தில் க.பொ.த.(சா/த) கல்வி பயிலும் மாணவர்களுக்கான விசேட விஞ்ஞான கருத்தரங்குகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 17,24 ஆம் திகதிகளில் இடம்பெற இருக்கும் இக்கருத்தரங்கினை NCI நிர்வனத்தின் உரிமையாளரும், முன்னால் மாகாணசபை உறுப்பினருமான ரிஸ்வி பாரூக் நடாத்தி வைக்க உள்ளார்.
இக்கருத்தரங்கு இரு அமர்வுகளாக இடம்பெற இருக்கிறது.
இதன் முதலாம் அமர்வு எதிர்வரும் 17ம் திகதி எனசல் கொல்ல மத்திய கல்லூரியிலும், இரண்டாம் அமர்வு 24ம் திகதி தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் இடம் பெற இருக்கின்றது.
அதே வேளை கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான சிற்றுண்டி வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
இக்கருத்தரங்கிற்கு தெல்தோட்டை வொய்ஸ் பூரண ஊடக அனுசரனை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி அடைந்த தெல்தோட்டையின் ஊத்தியோக பூர்வ ஊடகமாக தொழிற்படல் என்ற உயரிய இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தெல்தோட்டை வொய்சின் கன்னி சமூகப்பணி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை பள்ளேகம PPLI தெல்தோட்டை பிரதேசத்தில் பல்வேறு பட்ட சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் ஓர் சமூக அமைப்பு எனும் ரீதியில் அதனுடன் தெல்தோட்டை வொய்ஸ் கை கோர்ப்பதை இட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றது.
எனவே பயன்மிக்க இக்கருத்தரங்கில் கலந்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
(ஆ-ர்)

0 comments:
Post a Comment