பள்ளேகம PPLI னால் தெல்தோட்டை பிரதேசத்தில் க.பொ.த.(சா/த) கல்வி பயிலும் மாணவர்களுக்கான விசேட விஞ்ஞான கருத்தரங்குகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற் கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) எனசல் கொல்ல மத்திய கல்லூரியில் விஞ்ஞான கருத்தரங்கு நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இக்கருத்தரங்கினை NCI நிர்வனத்தின் உரிமையாளரும், முன்னால் மாகாணசபை உறுப்பினருமான ரிஸ்வி பாரூக் நடாத்தி வைக்க உள்ளார்.
அதே வேளை கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான சிற்றுண்டி வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
இக்கருத்தரங்கிற்கு தெல்தோட்டை வொய்ஸ் பூரண ஊடக அனுசரனை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி அடைந்த தெல்தோட்டையின் ஊத்தியோக பூர்வ ஊடகமாக தொழிற்படல் என்ற உயரிய இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தெல்தோட்டை வொய்சின் கன்னி சமூகப்பணி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை பள்ளேகம PPLI தெல்தோட்டை பிரதேசத்தில் பல்வேறு பட்ட சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் ஓர் சமூக அமைப்பு எனும் ரீதியில் அதனுடன் தெல்தோட்டை வொய்ஸ் கை கோர்ப்பதை இட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றது.
எனவே பயன்மிக்க இக்கருத்தரங்கில் கலந்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

0 comments:
Post a Comment