கண்டி - கலஹா பகுதியில் குளவி தாக்கி பாடசாலை மாணவர்கள் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலஹா - உடதெல்தோட்ட கனிஷ்ட வித்தியாலயத்திற்கு பின்புறமாக இருந்த குளவிக் கூடு இன்று (18) கலை 9.30 அளவில் களைந்துள்ளது.
இதன்போது பாடசாலை வளாகத்தில் இருந்த 22 மாணவர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் கலஹா கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment