ரியாதில் தொடர்ந்து சில தினங்களாக கடும் மழை பெய்து வருவதாக எமது விசேட ரியாத் செய்தியாளர் தெரிவித்தார்.
மழையினால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடிக்கடி இடி மின்னல் வெட்டுவதனால் மின்சாரம் துண்டிக்கப்படக்கூடிய அபாயகரமான சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மழை காரணமாக அல் இமாம் பல்கலைக்கழகம் இன்றைய தினம் மூடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த பல்கலைக்கழகத்தில் இலங்கை சேர்ந்த பல மாணவர்கள் கல்வி கற்பதும் குறிப்பிடத்தக்கது.
(நன்றி - ரியாத் செய்தியாளர் முக்ரம்)






0 comments:
Post a Comment