ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் உறுப்பினர் பதவியை நிராகரித்துள்ள அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உட்பட அவரது அணியினர் ஜாதிக ஹெல உறுமயவுடன் கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ள மாகாண சபை உறுப்பினர்களான ஷிரால் லக்திலக்க மற்றும் மைத்திரி குணரட்ன ஆகியோர் ஹெல உறுமய கட்சியுடன் இந்த பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.
சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த போவதாக ஷிரால் லக்திலக்க அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். ஜாதிக ஹெல உறுமயவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு அமையவே அவர் இதனை கூறியிருந்தாக பேசப்படுகிறது.

0 comments:
Post a Comment