வெளிநாட்டு பெண் ஒரு வரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்க முயற்சித்த மூன்று இளைஞர்களை தடுக்க முயன்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை சந்தேக நபர்கள் மூவரும் தாக்கிய சம்பவம் ஒன்று கண்டி பொலிஸ் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் மது போதையில் இருந்ததாகவும், தாம் கண்டி மாவட்ட முக்கிய எம்.பி ஒருவருக்கு மிக நெருக்கமானவர்கள் என்று பெருமையடித்துக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.
குறித்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், விரைவில் அவர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment