சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, November 4, 2013

இரு பைத்துஸ் ஸகாத் நிதியங்களுக்கு இடையிலான சமரச பேச்சு வார்த்தை வெற்றி!

By on 10:33 PM

தெல்தோட்டை ஜம்யதுல் உலமா சபையில் கீழ் இயங்கி வரும் பைத்துஸ் ஸகாத் நிதியம் சுமார் 08 வருட காலமாக தெல்தோட்டை பகுதியிலே இயங்கி வருகிறது. 09 ஜும்ஆ பள்ளிகளை உள்ளடக்கி 09 கிராமங்களுக்கு இதன் பணத்தை பகிர்ந்து அளித்து பாரிய பங்களிப்பை செய்து வருகிறது. 



என்றாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் கலஹா பிரதேசம் இதன் தலைமைத்துவத்திலிருந்து பிரிந்து சென்று தனிமையில் இயங்க ஆரம்பித்தது. இதன் போது பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. 



இஆத போன்ற சூழ்நிலை அண்மையில் 2012 ம் ஆண்டு பள்ளேகம ஜமாஅத்துடன் ஏற்பட்டு அவர்களும் தெல்தோட்டை பைத்துஸ் ஸகாத் நிதியத்துடன் பிரிந்து சென்று தனியாக பள்ளேகமயை மையமாக வைத்து பள்ளேகம பைத்துஸ் ஸகாத் என்ற பெயரில் தனியாக இயங்க ஆரம்பித்து பாரிய வெற்றிப்படிகளை ஒரு வருடத்தில் கண்டு கொண்டது.



அவர்களின் இம்முயற்சி பாரிய வெற்றி அளித்த போதும் சமூகத்தின் ஒற்றுமைக்கு பாரிய சவாலாகவும் தெல்தோட்டை ஸகாத் நிதியத்திற்கு பாரிய பின்னடைவாகவும் அமைந்தது.



இதனை கருத்திற் கொண்டு 2013-11-02 ம் திகதி நடைபெற்ற அங்கத்தவர் ஒன்று கூடலின் போது ஆர்.எம் ரிஸ்வான் அவர்களின் ஆலோசனைக்கினங்க பள்ளேகம பைத்துஸ் ஸகாத் நிதியத்துடன் நேரடி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க 2013-11-02 ம் திகதி மஃரிப் தொழுகையுடன் கலந்துரையாடலுக்கான வாய்பை பைத்துஸ் ஸகாத் கமிட்டி தலைவர் அல் ஹாஜ் லியாவுத்தின் மௌலவி அவர்கள் ஏற்பாடு செய்து தந்தார்.




எனவே அன்றைய தினம் பள்ளேகம மஸ்ஜிதுல் ஹுஸ்னா பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையுடன் ஆரம்பமான கூட்டத்தில் இரு கமிட்டி உறுப்பினர்களில் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். பள்ளேகம பைத்துஸ் ஸகாத் செயலாளர் பர்சான், உறுப்பினர் சுகைப் ஆகியோர் காத்திரமான கருத்துக்களை முன்வைத்ததோடு மௌலவி இல்யாஸ், லத்தீப் மௌலவி தெல்தோட்டை ஸகாத் நிதியத்தின் செயலாளர் எம்.எஸ்.என். ஸில்மி ஆகியோரும் தமது நியாயங்களை முன் வைத்தனர். இதன்படி இரு சாராரும் அடுத்த வருடத்திலிருந்து சேர்ந்து இயங்குவதாக ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர்.



இன்ஷh அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் பல திருத்தங்களுடன் கருத்து முரண்பாடுகள் களைந்து இரு சாராரும் இயங்க வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.      

( ஆர்.எம்.ரிஸ்வான்)

0 comments:

Post a Comment